வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 October 2024

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல்.

தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியலினை தயார் செய்திடவும், வாக்காளர் பட்டியலினை தூய்மையாக்கிடவும், வாக்காளர்கள் விபரங்கள் இரு இடங்களில் உள்ளதை ரத்து செய்திடவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளது முடிய 71.56 சதவிகிதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். 
இப்பணியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நகரப்பகுதிகளில் ஆதார் எண் இணைத்திடும் பணி மிக குறைவாக உள்ளதால், சிறப்பு முகாம் நாட்களில் அனைத்து வாக்காளர்களும் தங்களது ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்; உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்.1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad