குலசை முத்தாரம்மன் கோயிலில்உண்டியல் காணிக்கை எண்ணும் பணி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 October 2024

குலசை முத்தாரம்மன் கோயிலில்உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

குலசை முத்தாரம்மன் கோயிலில்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
நாணயங்களை பிரித்தெடுக்கும் இயந்திரம் வழங்கிய தொழிலதிபர்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான தசரா விழா கடந்த வாரம் நடைபெற்றது. மாதந்தோறும் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும். இந்நிலையில் தசரா பண்டிகை முடிந்த நிலையில் இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இதனை கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் இந்து சமய அறநிலைத்துறை திருநெல்வேலி உதவி ஆணையர் கவிதா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், மகாராஜா, வெங்கடேஸ்வரி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு தோப்புவிளையை சேர்ந்த தொழிலதிபர் ஜெய்சிங், உண்டியல் காணிக்கையின் நாணயங்களை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் முன்னிலையில் வழங்கினார்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad