தாக்கப்பட்ட சிஎஸ்ஐ மதபோதகர் அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 15 October 2024

தாக்கப்பட்ட சிஎஸ்ஐ மதபோதகர் அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல்.


தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தைச் சேர்ந்த மத போதகர் ஜெகன், இவர் ஆறுமுகநேரியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் மத போதாரராக இருந்து வருகிறார். இன்று அக்.15, காரில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருடைய காருக்கு, பின்னால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோரின் கார் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மேற்படி மத போதகர் முன்னாள் அமைச்சர்களுக்கு வழி விடாமல் சென்றதாக கூறி தூத்துக்குடி உப்பாத்து ஓடை அருகே சென்று கொண்டிருந்தபோது மத போதகர் ஜெகனை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் காயமடைந்த மதபோதகர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் மத போதகரை அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

No comments:

Post a Comment

Post Top Ad