குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பக்தர்களுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 6 October 2024

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பக்தர்களுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஆய்வு.

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பக்தர்களுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர்  கண்ணன் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடக 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று
பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது.  விழாவை ஒட்டி பக்தர்கள் மாலை அணிந்து காளி, அசுரன், குரங்கு உள்ளிட்ட வேடம் அணிந்து காணிக்கைகள் வசூல் செய்து வருகின்றனர்.  

விழாவையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசை வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், கோயில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பக்தர்களுக்கு தேவையான கழிவறை வசதி  குடிநீர்வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad