குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா. பக்தர்களை கவர்ந்த பக்தி இசை நிகழ்ச்சி, பாடகர் பொன்னி கண்ணன் குழுவினர் அசத்தல்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே குலசையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில் கலையரங்கில் தினமும் மாலை பக்தி பாடல் கச்சேரி, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாள் திருவிழாவான சனிக்கிழமை மாலை பொன்னி கண்ணன் குழுவினர் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாற்று திறனாளி பாடகர் பொன்னி கண்ணன் பக்தி பாடல்களை பாடி பக்தர்களை பரவசப்படுத்தினார். இதனை ஏராளமான பக்தர்கள் கேட்டு ரசித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment