சாயர்புரத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா அணிவகுப்பு ஊர்வலம் . - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 October 2024

சாயர்புரத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா அணிவகுப்பு ஊர்வலம் .

சாயர்புரத்தில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அணிவகுப்பு ஊர்வலமானது தூத்துக்குடி சாயர்புரம் பஸ் நிறுத்தம் அருகில் துவங்கி, சிவத்தையாபுரம் ஸ்ரீமுத்துமாலையம்மன் கோவில் அருகில் சந்தை திடலில் நிறைவு பெற்றது. 

நிகழ்ச்சிக்கு இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியபட்ட ஸ்ரீமுத்துமாலையம்மன் கோவில் தர்மகர்த்தா ஐ.பால்ராஜ் தலைமை வகித்தார். 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பகமண்ணார் இராமனுஜ ஜீயர் ஆசியுரை வழங்கினார். ப்ராந்த சம்பர்க ப்ரமுக் டாக்டர் ஸ்ரீனிவாச கண்ணன் சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கோட்டத்தலைவர் அ.காமராஜ் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் இரா.சீதாராமன், உட்பட 200 சுயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad