பழையகாயல் காலனி தெரு வழியாக நேற்று மாலை 5.30 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அத்தெருவில் உள்ள திருப்பத் தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக தெரு ஓரத்தில் இருந்த உயர்அழுத்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து லாரியின் மீது விழுந்தது. டிரைவர் லாரியில் இருந்தது குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அவ்வழியாக வந்தபொதுமக்களும் உயிர்தப்பினர். இந்த விபத்தால் பழையகாயல் முழுவதும் 1மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய இள நிலை உதவி பொறியாளர் ஹரிஸ்ராஜா சிங் தலைமையில் ஊழியர்கள் மின் இணைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியை தவிர மற்ற இடங்களுக்கு ஒரு மணி நேரத்தில் சீராக மின்விநியோகம் செய் யப்பட்டது. அந்த மின்கம்பத்தை மாற்றும் பணி யில் மின்வாரியத்தினர் ஈடுபட்டனர்
ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா #
No comments:
Post a Comment