ஆழ்வார்திருநகரி, அக்டோபர் :24 ஆழ்வார்திருநகரியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.யாழினி ஆகியோர் உத்தரவின் பெயரில் நாளை சனிக்கிழமை கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமினை ஆழ்வா்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி துவக்கி வைக்க உள்ளார்.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஆழ்வார்திருநகரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள். இசிஜி பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை,
பல் மருத்துவ சிகிச்சை, கண் மருத்துவ சிகிச்சை ,பொது மருத்துவம், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இரைப்பை மற்றும் குடல் நோய், மனநோய், பால்வினை நோய், இதயம், தோல் ,காது மூக்கு தொண்டை ,மகளிர் நலம் மற்றும் மகப்பேறு குழந்தைகள் நலம், மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருந்துகளும் இலவசமாக வழங்கப்படவிருக்கிறது, சித்த மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, கொழுப்பின் அளவு, சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, சிறு நீரில் உப்பு சர்க்கரை அளவு, மலேரியா ரத்த தடவல், இசிஜி, அல்ட்ராசோனாகிராம், கண்புரை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அன்றே அழைத்துச் செல்லப்படுவர். எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யப்படும் ,நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும், குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்படும், தொற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படும், மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிய சிறப்பு பரிசோதனை செய்யப்படும். தகுதியுள்ள நபர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தினில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவர்.
பொதுமக்கள் அனைவரும் தமிழக முதலமைச்சரின் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் தவறாது கலந்து கொண்டு சிறப்பு பரிசோதனைகளையும், சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்று நலவாழ்வு வாழ வேண்டுமென வட்டார மருத்துவ அலுவலர் எம்.எஸ். பார்த்திபன் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் ரா.ஜவஹர் , சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் அனிஷ் சுனில் தர்ஷன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment