திருச்செந்தூர் அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதமடைந்தது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 October 2024

திருச்செந்தூர் அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதமடைந்தது.

திருச்செந்தூர் அருகே லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதமடைந்தது. இதனால் அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

கர்நாடக மாநிலத்தில் இருந்து உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு தேவையான கனரக உபகரணங்களை ஏற்றியவந்த லாரி நேற்று அதிகாலை 3 மணியளவில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, லாரியில் இருந்த உயரமான உபகரணம் எதிர்பாராதவிதமாக ரயில்vவ கேட் மீது இடித்தது.

இதில் ரயில்வே கேட்டின் நீண்ட இரும்பு கம்பி வளைந்து உடைந்தது. இதுகுறித்து ரயில்வே கேட் ஊழியர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. எனவே அந்த ரயிலை காயல்பட்டினத்தில் நிறுத்தி வைத்தனர்.
வீரபாண்டியன்பட்டணம் ரயில்வே கேட்டின் இருபுறமும் தடுப்பு சங்கிலி அமைத்த பின்னர் அந்த வழியாக ரயில் சென்றது.

தொடர்ந்து சேதமடைந்த ரயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வழியாக ஆறுமுகநேரிக்கு செல்லும் வகையில் அனைத்து வாகனங்களும்திருப்பி விடப்பட்டன. 

காலை 11.30 மணியளவில் ரயில்வே கேட்டை சீரமைத்த பின்னர் அந்த வழியாக வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.


திருச்செந்தூர் #செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad