அம்மன்புரம் திருமணமண்டபக் கட்டிடம் - அமைச்சர் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 27 October 2024

அம்மன்புரம் திருமணமண்டபக் கட்டிடம் - அமைச்சர் திறந்து வைத்தார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் பல்வேறு நிதித்திட்டத்தின் கீழ் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் 5 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு மீன்வளம் – மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் இன்று(26.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.


திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், அதாவது மேலப்புதுக்குடி ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அண்ணா மறுமலர்ச்சி நிதித்திட்டத்தின் கீழ்ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், மூலக்கரை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி நிதித்திட்டத்தின்கீழ் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், மூலக்கரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்தினையும், அம்மன்புரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய பொதுநிதித்திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமணமண்டபக் கட்டிடத்தினையும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவுக்கூடக் கட்டிடத்தினையும் என மொத்தம் 4 இடங்களில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் 5 முடிவுற்ற திட்டப் பணிகளை மீன்வளம் – மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

முன்னதாக, திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன், 110 தூய்மைப் பணியாளர்களுக்கும், 35 முன்களப் பணியாளர்களுக்கும், 30 குடிநீர் திட்டப் பணியாளர்களுக்கும், 7 சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் என மொத்தம் 182 பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் நகர்மன்றத் துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, திருச்செந்தூர் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, அன்றோ, மூலக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பொன்செல்வி, அம்மன்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானராஜ், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் அவர்கள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad