திருச்செந்தூர் ஒன்றிய நகர மற்றும் ஆறுமுகநேரி கானம் பேருராட்சி கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி.சண்முகநாதன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன் பங்கேற்பு..... அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க திருச்செந்தூர் ஒன்றிய நகர மற்றும் ஆறுமுகநேரி கானம் பேருராட்சி கழகத்தின் சார்பாக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகிதார். திருச்செந்தூர் அதிமுக நகர செயலாளர் மகேந்திரன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ் பி.சண்முகநாதன் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு வரும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் மகாலிங்கம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, டாக்டர் என் சுரேஷ், ஆர் எம் கே சுந்தர், பழக்கடை திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, காணம் பேரூராட்சி செயலாளர் வீர வெற்றி வேல், ஒன்றிய அவைத் தலைவர் லிங்க குமார், காயல்பட்டிணம் நகர செயலாளர் காயல் மௌலானா, மாவட்ட விவசாய அணி தலைவர் தேவராஜ், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சுரேஷ்,
திருச்செந்தூர் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் விஜயராகவன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராணி, யூனியன் கவுன்சிலர் வாசுகி, ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுனர் அணி கவுன்சிலர் செல்வம், கவுன்சிலர் வேலம்மாள், மற்றும் மகளிர் அணியினர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், சுகிர்தா ஆறுமுகநேரி சாந்தி உட்பட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆறுமுகநேரி பேரூராட்சி கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment