தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நாளை (அக்.21) கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 20 October 2024

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நாளை (அக்.21) கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சேர்ந்து நாளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களை சந்தித்து மனு கொடுக்க இருப்பதால் மேற்படி துறைமுகத்திலிருந்து நாளை ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என தகவல் தெரிவித்துள்ளார்கள் 

கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் சாதாரண மீன்பிடி காலங்களிலும், மீன்பிடி தடை காலங்களிலும் மீன்பிடிக்க வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 6 விசைப்படகுகளை சிறை பிடித்து வந்த தூத்துக்குடி மீன்பிடி துறைமுக 11 விசைப்படகுகளின்உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவாக நாளை (21.10.2024) காலை சுமார் 10.00 மணிக்கு தூத்துக்குடி மீன் பிடி துறைமுக ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சேவியர் வாஸ் தலைமையில் கொண்ட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சகிதம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களை சந்தித்து மனு கொடுக்க இருப்பதால் துறைமுகத்திலிருந்து நாளை (21.10.2024) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad