திருச்செந்தூர் நீதிமன்ற சட்ட பணிக்குழு சார்பில்தேரிகுடியிருப்பு காமராஜர் பள்ளியில் விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 October 2024

திருச்செந்தூர் நீதிமன்ற சட்ட பணிக்குழு சார்பில்தேரிகுடியிருப்பு காமராஜர் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்.

திருச்செந்தூர் நீதிமன்ற சட்ட பணிக்குழு சார்பில்
தேரிகுடியிருப்பு காமராஜர் பள்ளியில் விழிப்புணர்வு முகாம்.

தூத்துக்குடி மாவட்டம், தேரிகுடியிருப்பு காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூர் நீதிமன்ற சட்ட பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.. இம்முகாமில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து குழந்தைகள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விளக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள், சட்ட திட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு பணியாளர் மகேந்திரன் வரவேற்றார். வட்ட சட்ட பணிக்குழு வழக்கறிஞர் பிரகாஷ் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் தலைமையாசிரியர் நன்றி கூறினார்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT. அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad