தமிழ் நாடு மதுரை இறையியல் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானவரம் அருட்செய்தி வழங்கினார். இந்த ஆராதனையில் ஓய்வு பெற்ற தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல முன்னாள் முதல் பேராயர் ஜெபச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து பேராலய சபா மண்டபத்தில் வருடாந்திரக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்தார். தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார்.
திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் வரவேற்றார். திருமண்டல துணை தலைவர் தமிழ் செல்வன், பொருளாளர் டேவிட் ராஜ், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியை திருமண்டல தகவல் தொடர்பு துறை இயக்குநர் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார்.
விழாவை முன்னிட்டு திருமண்டல நற்செய்தி அருட்பணி த்துறை சார்பில் 67 பேருக்கு தையல் இயந்திரங்கள், 17 பேருக்கு கிரைண்டர்கள், 26 பேருக்கு ஆடுகள், 9 பேருக்கு மருத்துவ செலவு, 9 பேருக்கு வீடு பழுது பார்த்தல், திருமண்டலத்தில் உள்ள பள்ளி மற்றும் சபைகளில் உள்ள தாய், தந்தை இல்லாத 105 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட ரூ.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து சுற்றுச்சூழல் கரிசனை துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.திருமண்டலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி நல்லாசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டன.
இதில் திருமண்டல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப், தொடர்புத்துறை செயலர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் கரிசனை துறை இயக்குநர் ஜாண் சாமுவேல், நற்செய்தி அருட்பணி த்துறை இயக்குநர் செல்வசிங் ஆர்தர், சமூக நலத்துறை இயக்குனர் ஜெயக்குமார் ஜாலி , பாலியர் நண்பன் ஊழிய இயக்குனர் எமில்சிங் மற்றும் திருமண்டல சபை மன்ற தலைவர்கள், குருமார்கள்
திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி,கல்லூரிகளைச்சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர் கள், இயக்குனர்கள்,, மாணவ_ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment