நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் மன்றத்தின் சார்பில் உலக விண்வெளி வார விழா நடைபெற்றது. ஆண்டுதோறும், அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது . இந்த ஆண்டு "விண்வெளியும் காலநிலை மாற்றமும்" என்ற தலைப்பின் அடிப்படையில் விண்வெளி வாரம் அனுசரிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், மாணவர்களுக்கு உலக விண்வெளி வாரத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தோற்றம், வளர்ச்சி, இதுவரை ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இயற்பியல் வரைபட கண்காட்சி நடைபெற்றது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பாக வரைந்து கொடுத்திருந்த 150 க்கும் மேற்பட்ட வரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. உலக விண்வெளி வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment