தூத்துக்குடியில் கணேஷ் நகரிலிருந்து அரசினர் பாலிடெக்னிக் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் இருந்து அரசினர் பாலிடெக்னிக் வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றார். ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
-தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment