ஆயர் ஸ்டீபன் அந்தோணி பங்கேற்பு... திருச்செந்தூர் - ஜீவா நகரில் உள்ள தூய அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவிற்கு ஆலய பங்குத்தந்தை இருதயராஜ் பர்னாந்து தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு திருவிழா கொடியை மந்திரித்து ஏற்றி வைத்தார்.
பின்னர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புது பொழிவு பெற்ற திருப்பீடத்தை மந்திரித்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். விழாவில் மணவை மறைவட்ட முதன்மை குரு பென்சிகர் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள் , சிங்கராயர்புரம், ஆலந்தலை ஆகிய இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த திருவிழா 4, முதல் தொடங்கி 5 ந் தேதி மாலை 6.00 மணிக்கு அமலி நகர் அமலி அன்னை நாளைய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் சிறப்பு திருப்பியும், அதனைத் தொடர்ந்து 6 ந் தேதி மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலமையில் நற்கருணை ஆசீர் ஆராதனை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை இருதயராஜ் பர்ணாந்து மற்றும் விழா கமிட்டியினர் பங்கு இறைமக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment