இயேசுவின் திரு இருதய அற்புத கெபியில் 350 வது ஆண்டு யூபிலி
விழா.
திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத் தலத்தில் 350 வது யூபிலி விழா சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் அக்டோபர் முதல் வெள்ளி ஆன இன்று தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் எல்லோரையும் அன்பு செய்யும் இயேசுவின் திரு இருதயம் என்ற தலைப்பில் நம் வாழ்க்கையில் அன்பு மட்டுமே உண்மையானது என சிறப்பு நற்செய்தியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை ஜெரோசின், அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வடக்கன்குளம் மறைவட்ம், ஆலந்தலை இறை மக்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை ஜோதிமணி மற்றும் பக்த சபைகள், ஆலந்தலை இறைமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment