ஊழலுக்கு எதிரான உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 October 2024

ஊழலுக்கு எதிரான உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நமது நாட்டின் பொருளாதாரம் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகின்றேன். 

அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். 
எனவே நான், அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என உறுதி கூறுகிறேன் என்ற ஊழல் தடுப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் திங்கள்கிழமை மக்கள் குறைகளை, களையும் நாள் கூட்டத்தில் எடுத்துக்கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் ஊராட்சிகள் உலகநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad