திருச்செந்தூரில் கஞ்சா குடிக்கிகள் தாக்குதல்- அட்டூழியம்” பிரபல செய்தி தொலைகாட்சி செய்திக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 October 2024

திருச்செந்தூரில் கஞ்சா குடிக்கிகள் தாக்குதல்- அட்டூழியம்” பிரபல செய்தி தொலைகாட்சி செய்திக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு.

திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய 2 பேர் உடனடியாக கைது - இந்த செய்தியை 'திருச்செந்தூரில் கஞ்சா குடிக்கிகள் தாக்குதல்- அட்டூழியம்” என்று உண்மைக்கு புறம்பாக பிரபல செய்தி தொலைகாட்சி செய்தி வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு.

திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் முத்து சுகுலேஷ் (21) என்பவர் கடந்த 17.10.2024 அன்று திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரராகவபுரம் தெருவில் வந்து கொண்டிருந்தபோது அதே பதியைச் சேர்ந்தவர்களான சுடலை மகன் கணேசன் கூவை (38), கிருஷ்ணன் மகன் ராமசாமி (28) மற்றும் சிலர் சேர்ந்து மதுபோதையில் முத்து சுகுலேஷை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து கல்லால் தாக்கியுள்ளனர். 

இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 19.10.2024 அன்று மேற்படி எதிரிகளில் கணேசன் கூவை மற்றும் ராமசாமி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் தலைமறைவான மற்றவர்களையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

அவர்களை புலன் விசாரணை மேற்கொண்டபோது முத்து சுகுலேஷ்க்கும் மற்றவர்களுக்கும் முன்பின் எந்த தொடர்பும் இல்லை என்பதும், சம்பவத்தன்று முத்து சுகுலேஷ் வீரராகவபுரம் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரை மது போதையில் வழிமறித்த நபர்கள் ஏன் இவ்வளவு வேகமாய் போகிறாய் என்று கேட்டு அதனை தொடர்ந்து அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்து சுகுலேஷை கல்லால் தாக்கியதும் தெரியவந்துள்ளது. 

மேலும் சம்பவத்தின்போது கஞ்சா பயன்படுத்தவில்லை என்பதும், வழிப்பறிக்காக முத்து சுகுலேஷை வழிமறித்து தாக்கவில்லை என்றும் சம்பத்தின்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாத்தினால் முத்து சுகுலேஷை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

எனவே இதுபோன்று நிகழ்வின் உண்மைத் தன்மை தெரியாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad