மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களான கோவில்பட்டி சீனிவாச நகரை சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (29) மற்றும் கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த கணபதி மகன் சுப்ரமணிகண்டன் (26) ஆகிய இருவரையும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் இன்று (25.10.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.
No comments:
Post a Comment