தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (01.10.2024), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
பெண்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற பெண்களுக்கு விலையில்லா மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள் மற்றும் எம்பிராய்டு தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் கொடுப்பதன் முக்கிய நோக்கமே அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு உதவியாக அமையும் என்பது தான்.
பெண்கள் தையல் பயிற்சி கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல் தற்போது உள்ள சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வணிக ரீதியிலான அடிப்படையில் எம்பிராய்டு போன்ற பயிற்சியெல்லாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளுங்கள். தற்போது சமுதாயத்தில் எம்பிராய்டு பயிற்சி பெற்றவர்கள் அதிகமான லாபம் ஈட்டுகிறார்கள்;. அதுமட்டுமல்லாமல், தையல் இயந்திரம் வைத்துள்ள பெண்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஜவுளிக்கடைகள், ஆயத்த ஆடையகம் போன்றிவற்றில் மொத்தமாக ஆடர் எடுத்து, தையல் தைத்து கொடுத்து தங்களது தொழிலை விரிவுபடுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற எனது வாழ்த்துகள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 135 இலவச தையல் இயந்திரங்களில் மோட்டார் 55 பொருந்திய தையல் இயந்திரங்கள் ரூ.3,20,320- மதிப்புடையவை மற்றும் 80 எம்பிராய்டு தையல் இயந்திரங்கள் ரூ.6,76,480- மதிப்புடையவை ஆக மொத்தம் ரூ.9,96,800- ஆகும். முதற்கட்டமாக 74 பயனாளிகளுக்கு ரூ.5,51,744- மதிப்பிலான விலையில்லா எம்பிராய்டு தையல் இயந்திரங்களும், 6 பயனாளிகளுக்கு ரூ.34,944- மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களும் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தற்போது, 6 பயனாளிகளுக்கு ரூ.50,736- மதிப்பிலான விலையில்லா எம்பிராய்டு தையல் இயந்திரங்களும், 49 பயனாளிகளுக்கு ரூ.2,85,376- மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களும் என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ.3,36,112- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பெ.பிரேமலதா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (மகளிர் அதிகார மையம்) ஜி.கே.நிவேதிதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment