கந்தசஷ்டி திருவிழா 07.11.2024 அன்று உள்ளூர் விடுமுறை. - ஆட்சியர் அறிவிப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 25 October 2024

கந்தசஷ்டி திருவிழா 07.11.2024 அன்று உள்ளூர் விடுமுறை. - ஆட்சியர் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் வருகின்ற 07.11.2024  வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2024-ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 07.11.2024  வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு  இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி ((Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.12.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad