புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் கீழ செக்காரக்குடி ராமகிருஷ்ணன் மகன் நெல்லையப்பன் (26), கதிர்வேல்நகர்
நடராஜன் மகன்
வெள்ளைச்சாமி (35)
ஆகியோர் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த நெல்லையப்பன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.
தகவலறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை போலீசார் இறந்த வாலிபரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த கதிர்வேல் நகர்
நடராஜன் மகன்
வெள்ளைச்சாமி (35) அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment