தூத்துக்குடி மாவட்டம் வேளாண்மை விளை பொருட்களில் அறுவடைக்கு பிந்தய சேதாரங்களை தவிர்த்து அதிக லாபம் பெற அரசு மூலம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவவர் க.இளம்பகவத் தகவல்
வேளாண்மை விளை பொருட்களில் அறுவடைக்கு பிந்தய சேதாரங்களை தவிர்த்து அதிக லாபம் பெற அரசு மூலம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி வழங்கப்படுகிறது. அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை திட்டங்களான விநியோக தொடர் சேவைகள், கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், ஆய்வுக்கூடங்கள், குளிர்பதன தொடர் சேவைகள், தளவாடவசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள்- சுத்தம் செய்தல், உலர்த்துதல், வகைப்படுத்துதல், தரம்பிரித்தல்;, மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் - சூரியமின் சக்தியுடன் கூடிய உட்கட்டமைப்பு, பழுக்கவைக்கும் அறைகள் முதலிய வேளாண் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வங்கிகடன் பெற்றுபயனடையலாம்.
பெறப்படும் வங்கி கடனுக்கு வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில் 3 சதவீதம் வட்டி சலுகை வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்று பயனடையலாம். பெறப்பட்ட கடனை ஏழு ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தலாம். கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் (CGTMS) ரூ.2 கோடி வரையும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஊக்குவிப்பு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.
மேலும், 3 சதவீத வட்டி சலுகை பெற்று பயன் பெறலாம். மேலும் 08.07.2020 க்கு பின்னர் பெறப்பட்ட அனைத்து வேளாண் உட்கட்டமைப்பு வங்கி கடன்களை இத்திட்டத்தில் இணைத்தும் பயன்பெறலாம்.
மேலும், இத்திட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் (PACS), சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள் (MCS), விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs) மற்றும் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் (SHGS) கூட்டுப் பொறுப்பு குழுக்கள் (JLGS) பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர் மத்திய மாநில அரசு உதவி பெறும் போது -தனியார் கூட்டு திட்டங்கள், சுய உதவிக் குழுக்கள், தனிப்பட்ட வணிக உரிமையாளர்கள், அரவைஉரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியோர் பயனடையலாம்.
இத்திட்டம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் தொடர்பான தகவல்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) - 90432 86097, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் அலுவலர் - 97882 87514, கோவில்பட்டி வேளாண்மை அலுவலர் - 96557 76826, திருச்செந்தூர் வேளாண்மை அலுவலர் - 94881 02018 ஆகியோரின் எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆதார் எண் வங்கிக்கணக்கு விபரம், வருமானவரி தாக்கல் செய்த விபரம், இட உரிமைக்கான ஆதார ஆவணங்களை வழங்கி எளிய முறையில் இந்த வேளாண் உட்கட்டமைப்பு நிதியினையும் 3 சத வட்டி சலுகையினையும் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.
.jpeg)
No comments:
Post a Comment