செப்.13, தூத்துக்குடி மறை மாவட்டம் சொக்கன் குடியிருப்பு கிராமத்தில் அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை திருப்பயணம் நடந்தது. இதில் புனித தனிஸ்லால் இளைஞர் சபை, புனித வளவன் தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சின்னராணிபுரம் இறைமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காலை 7:30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் முன்னிலையில் சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் சொக்கன்குடியிருப்பு திருத்தல அதிபர் அருட் தந்தை ஜான்சன் ராஜ் ,மற்றும் திருத்தல நிதி குழுவினர், அருட் சகோதரிகள், இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி தினமும் காலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 7 மணிக்கு நவநாள் ஜெபம் , மறையுறை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான வரும் 21ம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு அதிசய மணல் மாதா சப்பரபவனி நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மேலும் 9ம் நாள் திருவிழா அன்று மதியம் அசன விருந்து நடக்கிறது.
தொடர்ந்து பத்தாம் நாள் திருவிழாவான வரும் 22ம் தேதி 226 வது ஆண்டு பெருவிழா திருப்பலி மற்றும் ஜெப மாலை ,அதிசய மணல் மாதா சப்பரபவனி, நற்கருணை ஆராதனை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான்சன் ராஜ், மற்றும் திருத்தல நிதி குழுவினர், இறை மக்கள் செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment