குலசையில் தசரா திருவிழா 3ம்தேதி தொடக்கம் பக்தர்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்தால் நடவடிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி வசந்த ராஜ் எச்சரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 September 2024

குலசையில் தசரா திருவிழா 3ம்தேதி தொடக்கம் பக்தர்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்தால் நடவடிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி வசந்த ராஜ் எச்சரிக்கை.

குலசையில் தசரா திருவிழா 3ம்தேதி தொடக்கம் பக்தர்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்தால் நடவடிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி வசந்த ராஜ் எச்சரிக்கை.

செப்.13, புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வரும் 3 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 

அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் குலசேகரபட்டினத்தில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. 


கூட்டத்தில் திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ் கலந்து கொண்டு பேசியதாவது : குலசை தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பக்தர்கள் கத்தி, வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வரக்கூடாது . மீறி கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்படுவதோடு , அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும், என்றார். கூட்டத்தில் பக்தர்களுக்கு குடிநீர் , கழிப்பிடம் ,பஸ் வசதி, மின்சார வசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தவசதி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 


கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், செயல் அலுவலர் ராமசுப்ரமணியம், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், காவல் ஆய்வாளர் ரகுராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலை பெருமாள், கோவில் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி, குலசேகரபட்டினம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கணேசன், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன் மற்றும் தசரா குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தசரா குழு தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad