கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 September 2024

கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை 
தொடங்கி வைத்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!


தூத்துக்குடி மாவட்டத்தில் 6 நடமாடும்
கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்
கால்நடை பராமரிப்புத் துறை உதவி
இயக்குநர் அலுவலக வளாகத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடைகளுக்கு மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நோக்கில் 6 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத், தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி மற்றும் துணைத் தலைவர் ஏ.பி ரமேஷ் மற்றும் ஒன்றிய நகர திமுக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad