செப்.01, திருச்செந்தூர், திருச்செந்தூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி வரை செல்லும் வண்டி எண் 06647, மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 4:30க்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரை செல்லும் வண்டி எண் 06409 ஆகிய இரு பயணிகள் ரயில்களும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறக்கூடிய ட்ராக் பணிகளுக்காக செப்.01. முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.
இதை அடுத்து நமது தமிழக குரல் செய்தியாளர், மதுரை மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி அவர்களை தொடர்பு கொண்ட போது, தெரிவித்த தகவலின் அடிப்படையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று நெல்லை to திருச்செந்தூர் வழித்தடங்களில் அனைத்து ரயில்களும் இன்று செப்.01 முதல் எவ்வித மாற்றம் இன்றி வழக்கம் போல் இயங்கும் என அறிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் தென்னக இரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment