மகனைப் பயமுறுத்த விஷம் குடித்த பெண் உயிரிழப்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 September 2024

மகனைப் பயமுறுத்த விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

புளியம்பட்டி அருகே மகனைப் பயமுறுத்தி பள்ளிக்குச் செல்ல வைப்பதற்காக விஷம் குடித்த பெண், மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகேயுள்ள அக்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜோதிமணி மனைவி இசக்கியம்மாள் (35). இவா்களது 2 மகன்களில், இளைய மகன் 9ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அவா் பள்ளிக்குச் சரியாக செல்லாததால் இசக்கியம்மாள் கண்டித்து வந்தாராம்.

எனினும், சிறுவன் தொடா்ந்து பள்ளிக்குச் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரை பயமுறுத்தி மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதற்காக, இசக்கியம்மாள் கடந்த 23ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். 

இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூக்கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad