திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 September 2024

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு.

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் கீதா ஜீவன்பங்கேற்பு

விளாத்திகுளத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார். 

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் விளாத்திகுளத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு கழக வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றினர். 

கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அயன்ராஜ் ஒன்றிய துணைச் செயலாளர் ராமசாமி பாலம்மாள் தங்கராஜ் அம்மாசி ஒன்றிய பொருளாளர் கருப்பசாமி மாவட்ட பிரதிநிதிகள் முனியசாமி பாஸ்கரன் சந்தனவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ராமசுப்பு வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் உட்பட கிளை செயலாளர்கள் விளாத்திகுளம் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad