மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி : கனிமொழி எம்பி வழங்கினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 September 2024

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி : கனிமொழி எம்பி வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி : கனிமொழி எம்பி வழங்கினார்!

தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 52 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார். 

தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற "கலைஞர் கனவு இல்லம்" திட்ட கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1 கோடியே 52 இலட்சம் மதிப்பிலான கடனுதவி மற்றும் 8 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்ட கடனுதவி ஆகியவற்றை கனிமொழி எம்பி வழங்கினார்.

விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad