கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்க கோரி தூத்துக்குடியில் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்க கோரியும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் புனித மரியன்னை பெண்கள் கல்லூரி மாணவிகள் இன்று மாணவிகள் கருப்பு உடை அணிந்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment