விளாத்திகுளம் அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி, இ.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கமலக்கண்ணன் (21), இவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கமலக்கண்ணன் கடந்த 22 ஆம் தேதி விஷம் மருந்தை குடித்துள்ளார்.
இதையடுத்து அவரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment