நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு சிக்னல் கம்பெனி என்சிசி திருநெல்வேலி சார்பில் என்சிசி மாணவர்களுக்கான வருடாந்திர பயிற்சி முகாம் மதுரை இடையப்பட்டி என்சிசி பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
கமெண்டிங் அதிகாரி கர்னல் டி ஆர் டி சின்ஹா தலைமையில், ஜூனியர் கமிஷன் அதிகாரிகள் பாண்டியன், தசரதன், கம்பெனி ஹவில்தார் மேஜர் சதீஷ்குமார், ரகுநந்தன் மற்றும் ஹவில்தார் தமங் மற்றும் சுராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
அணி வகுப்பு பயிற்சி, துப்பாக்கி சுடுதல், ஆயுதங்களை கையாளுதல், வரைபடம் மற்றும் திசை காட்டி குறித்து புரிந்து கொள்ளுதல், யோகா, சுகாதாரம், முதலுதவி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் 32 மாணவர்கள் உட்பட 600க்கும் அதிகமான என்சிசி மாணவர்கள் பல்வேறு பள்ளிகளிலிருந்து பங்கேற்றனர்.
சான்றிதழ் பெற்ற மாணவர்கள் ஏ சான்றிதழ் தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து சான்றிதழ்களை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். என்சிசி அலுவலர் சுஜித் செல்வர் சுந்தர் நன்றி கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் ஆலோசனையின் பேரில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment