தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உணவு திருவிழா ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது.
திட்ட இயக்குனர் மல்லிகா உத்தரவின் பேரில் நடைபெற்ற உணவு திருவிழாவில் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் இருந்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகள் தயார் செய்து காட்சிப்படுத்தி அதன் பலன்கள் பற்றி விளக்கம் அளித்தனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி பாக்கியலிலா,சிவராஜன்,தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.வட்டார மேலாளர் வேல்கனி வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அகிலாண்டேஸ்வரி,பவானி,வள்ளியம்மாள்,அக்னி மாரி, ஜெயலட்சுமி,ஜெயா மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment