தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். நாடார் பாதுகாப்பு பேரவை என்னும் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், சமூகத்தில் பண பலம், படைபலம் என்று சகல அந்தஸ்துகளுடன் இருந்தவர் வெங்கடேச பண்ணையார்.
இவரது 21ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் அம்மன் புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி சண்முகநாதன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, செல்ல பாண்டியன் உள்பட நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வெங்கடேச பண்ணையாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி ஏராளமான போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment