செப்டம்பர்:5, நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் முன்னிலை வகித்தார். மேளதாளங்கள் முழங்க மாணவர்கள், ஆசிரியர்களை வரவேற்றனர்.
பள்ளி மாணவர்கள் மாறுவேட போட்டியிட்டு வந்தனர். பேச்சுப்போட்டி, நாடகம், நடனம், பாடல் மற்றும் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளை மாணவர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். ஆசிரியர்களுக்கு லக்கி கார்னர் மற்றும் மியூசிக்கல் சேர் போட்டி ஆகியவற்றை மாணவர்கள் நடத்தினர்.
பள்ளி மாணவ மாணவிகள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினர். இறுதியில் ஆசிரியை சுதா நன்றி உரை கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை பள்ளி தலைவர் மற்றும் மாணவர்கள் மிகச்சிறப்பாக செய்து இருந்தனர். இறுதியில் மாணவர்கள்,
ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சிற்றுண்டி வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment