செ.06, திருச்செந்தூரில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி வரை செல்லும் வண்டி எண் 06674, மற்றும் மாலை திருநெல்வேலியில் இருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரை செல்லும் வண்டி எண் 06409. ஆகிய இரு ரயில் சேவைகளும்,
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் ட்ராக் பணி முழுமை பெறாத காரணத்தினால், ரயில்களின் பாதுகாப்பு கருதி, வருகின்ற செப்டம்பர் 09 முதல் அடுத்த மாதம் அக்டோபர் 03 தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஏற்கனவே செப்டம்பர் 01 முதல் ரத்து செய்யப்படுவதாக இருந்த இந்த பயணிகள் ரயில், கடந்த வாரங்கள் முழுவதும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்துள்ளது, எனவே தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் வருகின்ற செப்டம்பர் 09 முதல் அக்டோபர் 03 வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு இந்த சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை தென்னக ரயில்வே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்
No comments:
Post a Comment