நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான ஹாக்கி போட்டி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 3 September 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான ஹாக்கி போட்டி.

செப்.03, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார அளவிலான ஹாக்கி போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஹாக்கி போட்டிகளில் பங்குபெற்றனர். 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்டார்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும் பெற்றனர். 

வட்டார விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை பட்டு டால்மி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் குணசீலராஜ், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad