திருச்செந்தூரில் தூய்மையே சேவை திட்ட சைக்கிள் பேரணி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 September 2024

திருச்செந்தூரில் தூய்மையே சேவை திட்ட சைக்கிள் பேரணி

திருச்செந்தூரில் தூய்மையே சேவை திட்ட சைக்கிள் பேரணி தபால் துறை ஊழியர்கள் பங்கேற்பு.

ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் நடத்தப்படும் தூய்மையே சேவை சிறப்பு இயக்கம் 4.0 பதிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசில் 48 க்கும் மேற்பட்ட அமைச்சகங்களும், சுமாா் தொன்னூறுக்கும் மேற்பட்ட துறைகளும் உள்ளன. இந்த துறைகளில் தூய்மையே சேவை, சிறப்பு இயக்கம் 4.0 தொடங்கப்பட்டுள்ளது. தூய்மையைப் பராமரிக்கவும், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்து குறைகளைத் தீா்ப்பதற்கான இந்த சிறப்பு இயக்கம் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தூய்மையே சேவை திட்டத்தின் தொடக்கமாக திருச்செந்தூர் தலைமை தபால் அலுவலகத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது. 


பேரணியை திருச்செந்தூர் உப கோட்ட கண்காணிப்பாளர் ஜடா எபனேசர் ராஜா பாய் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் திருச்செந்தூர் தலைமை அஞ்சலக அதிகாரி ஐயாதுரை உள்பட 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். 


திருச்செந்தூர் தலைமை அஞ்சலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி டிபி ரோடு, நாடார் தெரு, கோட்டை தெரு வழியாக மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad