தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா ஆவணித் திருவிழா என இரண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்காண ஆவணித் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 7ஆம் திருநாள், 8ஆம் திருநாளில் ஷண்முகர் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து 7.05 மணிக்கு நிலையை சேர்ந்தது.
அதனைத்தொடர்ந்து 7.10 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் உலா வந்து 8.35 மணியளவில் நிலையைசேர்ந்தது.
திருத்தேர் வடத்தை திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.
தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, திருக்கோவில் அதிகாரிகள் அஜித், ASO ராமச்சந்திரன் , பேஸ்கார் ரமேஷ், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்.


No comments:
Post a Comment