தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 September 2024

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள் கைது.

தூத்துக்குடி மாவட்டம் : 11.09.2024, தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள் கைது - 1 கிலோ 100 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.


தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சோபா ஜென்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் இன்று (11.09.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அம்பேத்கர்நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், 

அவர்கள் தூத்துக்குடி 2ம்கேட் பகுதியைச் சேர்ந்த ஜோதிராஜ் மகன் மேத்யூ (27), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியை சேர்ந்தவர்களான பாண்டியராஜ் மகன் சுதர்சனன் (எ) சுதர்சன் (23), மாரியப்பன் மகன் பொன்செல்வம் (எ) செல்வம் (28) மற்றும் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுபாஷ் (22) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் மேத்யூ சுதர்சனன் (எ) சுதர்சன், பொன்செல்வம் (எ) செல்வம் மற்றும் சுபாஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1கிலோ 100 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad