நாசரேத் நகர வணிகர் சங்கத்தின் 24வது ஆண்டுவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 September 2024

நாசரேத் நகர வணிகர் சங்கத்தின் 24வது ஆண்டுவிழா.

நாசரேத் நகர வணிகர் சங்கத்தின் 24வது ஆண்டு விழா, நாசரேத் ஜோதி மாளிகையில் வைத்து 22-09-2024 அன்று மாலை 5 மணிக்கு சங்க தலைவர் ஜெபஸ்திலகராஜ் தலைமையில் இறைவணக்கத்துடன் நடைபெற்றது. 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா. வெள்ளையன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது, வணிகர் நலன் குறித்து கருத்து அரங்கம் நடைபெற்றது. சங்க வரவு - செலவு வாசித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறப்பு விருந்தினராக V.S.R. ராமசந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

கிருஷ்ணராஜ் வரவேற்புரை ஆற்றினார், பாபுசெல்வன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார், V. ரஞ்சன் நன்றியுரை கூறினார். 


இந்நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவு பெற்றது.

1. உணவு பொருட்களுக்கான GST முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.

2. மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

3. மிர் கணக்கீடு முறை மாதா மாதம் அமுல்படுத்த வேண்டும்.

4. சொத்து வரி மற்றும் பத்திரபதிவு உயர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

5. வணிக வளாகத்தில் கண்டிப்பாக கழிவறை வசதி செய்ய, பேரூராட்சி நிர்வாகம் அதற்கான முயற்சிகளை எடுத்து செய்து கொடுக்க வேண்டி தீர்மானம்.

6. நாசரேத் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது மக்கள் வசதிக்கு இலவச கழிப்பிடம் செய்து தர தீர்மானம்.

7. நாசரேத் வார சந்தை பகுதியில் நெடுஞ்சாலை ரோட்டில் கடைகளை அகற்றி சந்தைக்கு உட்புறம் அமைத்து அதற்கான பேரூராட்சி மன்றத்தின் மூலம் அரசு நிர்ணயித்த காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்கு வார சந்தை முடித்து விட வேண்டும் அதற்கான முயற்சியை பேரூராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.

8. நாசரேத் வழியாக இயக்கப்பட்ட ஈரோடு, கோவை, சென்னை, பெங்களூர் அரசு விரைவு பேரூந்துகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் இயக்கப்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9. நாசரேத்தை மையப் பகுதியாக வைத்து, இந்தப் பகுதியினரின் நெடுநாள் கோரிக்கையான தாலுகா அலுவலகம் அமைத்து தர தீர்மானம்.

10.நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு திருச்செந்தூரிலிருந்து இணைப்பு ரயில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லவும், இரவு 11 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லவும் தீர்மானம்.

11.நாசரேத் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கூடாது.

12. நாசரேத் சுற்றுவட்டார பகுதியில் விளையும் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் கிடைக்கவும், மீதமுள்ள விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்க சேமிப்பு (குளிர்) கிடங்கு அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

13.பிடாநேரி சிட்கோ பகுதியில் அதிக நிறுவனங்களை உருவாக்க அரசு முழு முயற்சி எடுத்து வேலை வாய்ப்புகளைப் பெருக்க நாசரேத் நகர வணிகத்தைக் காக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

24வது ஆண்டுவிழாவுக்கான நிகழ்ச்சிகள் அனைத்தையும் வணிகர் சங்க செயலாளர் செல்வன் சிறப்பாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad