05.10.2024 அன்று தூத்துக்குடி வ. உ. சி கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 September 2024

05.10.2024 அன்று தூத்துக்குடி வ. உ. சி கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம்.

                                     
செப்.25, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரி இணைந்து, வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் 05.10.2024 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.   

இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி, B.E, Diploma, Nursing, ITI படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த முகாம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Thoothukudi Employment office என்ற Telegram channel-ல் இணையவும். உங்கள் அலைபேசியில் telegram செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு Thoothukudi Employment officeஎன search செய்தால் சேனல் தோன்றும். அதன் உள் நுழைந்து join என்பதனை click செய்து எளிதில் சேனலில் இணைந்தும், இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deo.tut.jobfair@gmail.com அல்லது தொலைபேசி எண்.0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் தகவல்களை பெறலாம். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க TamilNadu Private Job Portal (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் வேலைநாடுநர்கள்(job seeker) எனில் candidate login -இல் பதிவு செய்யவும், வேலையளிப்பவர்கள்(employer) எனில் employer login -இல் கட்டாயம் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 

மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் வேலை நாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad