டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 28 August 2024

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி.

நாசரேத்.ஆக.28. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய அளவில்,  கண் மருத்துவமனைகளும்,  அதனை சார்ந்த கண் வங்கிகளும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடித்து வருகிறது இதன் வழியில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நாசரேத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து  நாசரேத் காவல் நிலையம் அருகில் உள்ள சீரணி கலைரங்கத்தில் இருந்து பேரணி ரெயில்வே பீடர் ரோடு, மர்க்காசிஸ் ரோடு, சந்தி வழியாக மர்க்காசிஸ் பள்ளி மைதானத்தில் இனிதே பேரணி நிறைவு பெற்றது.  

இந்த பேரணியில் மாணவ மாணவியர்கள் மற்றும் 500 பேருக்கு மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்துகொண்டு மாபெரும் கண்தான விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது. பேரணியில் தலைமை விருந்தினராக சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் T. சுபக்குமார், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி,  நாசரேத் வணிகர் சங்கத் தலைவரும், மாநிலத் துணைத் தலைவர் ஜெபஸ் திலகராஜ், செயலாளர் செல்வன், பொருளாளர்  அகிலன், லயன்ஸ் கிளப் தலைவர் ஜான்சன்  கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை ஏந்தி பேரணியை தொடங்கி வைத்து பேசினார்கள்.

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் பிரேம்குமார் ஜோசப்  கண் தானம் செய்வதின் அவசியத்தை குறித்தும் உலக அளவில் கருவிழி பார்வை இழப்பு தடுப்பதை குறித்தும் விரிவாக எடுத்துரைதார்கள். டாக்டர் அகர்வால் கண்  மருத்துவமனையில் உலக தரத்தில் தையல் இல்லா கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களுடன் உதவியுடன் செய்யப்படுகிறது என்பதையும் மேற்கோள் காட்டினார்.

பேரணியில் நாசரேத் மர்க்காசிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லூகாஸ் சமுதாய நர்சிங் கல்லூரி, நாசரேத் மர்க்காசிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள்  கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு வாசகங்களை கூறியும் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

இதனையொட்டி  டாக்டர் அகர்வால் ஆப்டோ மெட்ரி கல்லூரி மாணவ மாணவியர்கள் சார்பில் கண்தானம் செய்வதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு படங்கள் வரைந்து காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த இரண்டு வாரங்களில் (ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை ) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்தானம் குறித்த ஓவியம்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணைப் பொது மேலாளர் பிரபு, மேலாளர்கள் காட்வின் சந்திரசேகர், கோமதிநாயகம், பேச்சிமுத்து, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad