ஆகஸ்ட்.28, அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியான திருச்செந்தூர் ஒன்றியம் மற்றும் நகரத்துக்கு உட்பட்ட உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட்.27)மாலை திருச்செந்தூரில் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், நகர கழக செயலாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ் பி. சண்முகநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், இணைச்செயலாளர்கள் கோட்டை மணிகண்டன், சுரேஷ் பாபு, பழக்கடை திருப்பதி, டாக்டர் என் சுரேஷ், ஒன்றிய அவைத் தலைவர் லிங்க குமார், ஆழ்வை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஓடைக் கண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட மீனவரணி தலைவர் ரெஜிபர்ட் பர்ணாந்த், மாவட்ட வழக்கறிஞர ணி இணை செயலாளர் ஜேசுராஜ், காணம் நகரச் செயலாளர் வெற்றிவேல், காயல்பட்டினம் நகர செயலாளர் காயல் மொவலான உட்பட அதிமுக கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் அதிமுக உறுப்பினர் அன்பு வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் என்ற பாடலை அனைவரையும் முன்பு பாடி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment