திருமறையூர் - ஆலய அசன பண்டிகை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 8 August 2024

திருமறையூர் - ஆலய அசன பண்டிகை.


திருமறையூர் - ஆலய அசன பண்டிகை.


நாசரேத், ஆகஸ்ட்.07, திருமறையூர் சேகரம் மறுரூப ஆலயத்தின் 17 ஆவது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 35 வது அசன பண்டிகை  நடைபெற்றது.


ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஆலயத்தில் பிரதிஷ்டை ஆயத்த ஆராதனை நிறைவு பெற்றவுடன் வானவேடிக்கை நடைபெறும்.  இவ்வருடத்திலே சுற்றுச்சூழல் மாசுபடுவதை கருத்தில் கொண்டு வானவேடிக்கையை தவிர்த்து விட்டனர்.


விழா நடத்தும் அசனகமிட்டியார் மற்றும் திருச்சபை மக்கள் இதனை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள். ஆராதனையை தொடர்ந்து ஆலய வளாகத்தில் ஐக்கிய விருந்து நடைபெற்றது. இதில் சிறப்பு என்னவெனில், இந்த ஐக்கிய விருந்தானது எவர்சில்வர் தட்டுகளில் பரிமாறப்பட்டது. தட்டுகளில் விரிக்கும் பிளாஸ்டிக் பேப்பரும் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது. மேலும் குடி தண்ணீருக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் கொடுக்கப்படும் குடிநீர் தவிர்க்கப்பட்டு எவர்சில்வர் டம்ளர்களிலே தண்ணீர் கொடுக்கப்பட்டது.


ஐக்கிய விருந்து நடைபெற்று முடிந்ததும் எந்தவித கழிவுகளும் இன்றி ஆலய வளாகமும் மிக சுத்தமாக காணப்பட்டது. வரும் காலத்தில் அசன விருந்திலும் பிளாஸ்டிக் பாட்டில் நிறுத்த ஆவண செய்யப்படும். ஒவ்வொரு ஆலயத்திலும் இதுபோன்று சுற்றுச்சூழலுக்கு ஏதுவான காரியங்கள் செய்வார்கள் என்றால் நிச்சயமாக  இயற்கை சீரழிவில் இருந்து இவ்வுலகை பாதுகாக்க முடியும் என்று தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்று சூழல் கரிசனை துறை இயக்குனரும் மறு ரூப ஆலய குருவானவருமான அருட்திரு. ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad