ஆழ்வார்திருநகரி - ஊரக தொழில் முனைவோருக்கான ஆதரவை வழங்கும் உங்கள் மதி சிறகுகள் தொழில் மையம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 August 2024

ஆழ்வார்திருநகரி - ஊரக தொழில் முனைவோருக்கான ஆதரவை வழங்கும் உங்கள் மதி சிறகுகள் தொழில் மையம்.

தூத்துக்குடி, ஆகஸ்ட்.23, தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்டம் (TNRTP) என முன்னர் அழைக்கப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP), தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் உள்ள 3994 கிராமங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை இந்த திட்டம் தொழில் ஊக்குவிப்பு மூலம் சுய சார்புள்ள சமூகங்களாக உருவாக்குவதற்கு நிறுவப்பட்டுள்ளது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்றான ஓரிட சேவை மையமான மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM) ஊரக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவை, மற்றும் வணிக ஒருங்கிணைப்பு சேவைகளை வழங்கும். நாற்பத்தி இரண்டு (42) MSTM - மையங்கள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு மையமும் அடுத்தடுத்த இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் உள்ள தொழில் முனைவோர் / தொழில் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இம்மையம் ஒருங்கணைந்த சேவை மையமாக செயல்பட்டு, தொழில் கருத்துருவாக்கம், அரசு துறை திட்டங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான வணிகத்திட்டம் தயாரித்தல், தொழில் நடத்துவதற்கான சான்றிதழ்கள், பதிவு மற்றும் இணக்கம் பெறுதல், திட்ட மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் ஆதரவு, சந்;தைப்படுத்துதல், பிராண்டிங் ஆதரவு போன்ற பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு சேவைகளை வழங்குகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு இ-சேவை மற்றும் புளுவு (சரக்கு மற்றும் சேவை வரி) சேவைகளை வழங்குகிறது.

தொழில் முனைவோராக வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது தொழில் தொடங்க திட்டமிடுபவர்கள் மிகக்குறைந்த செலவில் ஆளுவுஆ - மையங்களிலிருந்து பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மையங்களிலிருந்து வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு, சுய உதவி குழு உறுப்பினர்கள் தங்கள் தொழில்களை நிலைத்தன்மை மற்றும் செழிப்பு நோக்கி திறம்பட வளர்த்து கொள்ள முடியும்.

இந்த மையங்களில் ஒரு நிறுவன மேம்பாட்டு அலுவலர் (EDO), மற்றும் ஒரு நிறுவன நிதி அலுவலர் (EPO) ஆகியோர் மையத்தின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு பொறுப்பாவார்கள், மேலும் தொழில் சார்ந்த நிபுணர்கள் தொழில் முனைவோர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வார்கள்.

இந்த சேவைகளைப் பெற, மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM), வட்டார சேவை மைய கட்டிடம், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், தென்திருப்பேரை, 618 623 என்ற முகவரியிலும் 04639 - 213898 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad