சுவாதி நட்சத்திரம் என்றால் என்ன - இதோ. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 August 2024

சுவாதி நட்சத்திரம் என்றால் என்ன - இதோ.



சுவாதி நட்சத்திரம் என்றால் என்ன - இதோ.


ஆழ்வார்திருநகரி, ஆகஸ்ட்.09, இந்த சுவாதி நட்சத்திரத்திற்க்கும் தென் தமிழ்நாட்டின் தலையாய வைணவ ஸ்தலமான நம்மாழ்வாரின் ஆழ்வார் திருநகரிக்கும் ஒரு தொடர்பு உண்டு என்ன தெரியுமா?


சுவாதி என்றால் நரசிம்ஹருக்கு மட்டுமல்ல பகவானின் வாகனமான கருடருக்கும் உரியது


இந்த ஆழ்வார் திருநகரியில் கருடனுக்குத் தனி ஏற்றம்.


இங்கு கோவில் மதில் மேல் வடகிழக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சித்திரத்தன்று திருமஞ்சனம் நடக்கும்


அந்த வடகிழக்கு மூலையில் தனியாக கருடருக்கு என சந்நிதி உள்ளது அங்கே கருடனுக்கு இரண்டு உயரமான தீப ஸ்தம்பங்கள் உள்ளன


முற்காலங்களில் நித்யமும் அந்த தீபஸ்தம்பங்களில் தீபம் ஏற்றுவார்களாம் இக்காலத்தில் எப்போதாவது தான் ஏற்றுகிறார்கள்


சுவாதி நட்சத்திரம் அன்று கண்டிப்பாக ஏற்றுவார்கள்


இந்த வடகிழக்கு மூலையில் உள்ள கருடனுக்கு  தினமும் ஆறு காலப் பூஜையும் நடக்கிறது


ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருடனின் அவதார உற்சவம் இங்கு 10 நாட்கள் விமர்சையாக நடக்கும்


இங்குள்ள கல்மண்டபத்தில் அந்த 10 நாட்களும் ஶ்ரீவைஷ்ணவ திவ்ய பிரபந்த  சேவாகால கோஷ்டி நடைபெறும்.


அந்த வேளைகளில் பக்கத்துக் கிராமங்களிலிருந்து ஆண்பெண் என பல்லாயிரக்கணக்கான மக்கள் 10 நாட்கள் தீவீரமாக விரதமிருந்து இந்த கருடனுக்குப் பால்குடம் எடுத்து வருவார்கள்


அதுமட்டுமல்லாமல் தினமும் பலரும் வந்து நேர்த்திகடனாக சிதறு தேங்காய் உடைக்கின்றனர்


அதாவது சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனகளை நிறைவேற்றும் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரப்பிரசாதி இந்த கருடன் என்கின்றனர் (மக்கள் உடைத்து சிதறும் தேங்காயை எடுத்து உலர்த்திக் கொப்பரை/எண்ணெய் செய்வதற்காகவே தனியாக பணியாட்களும் ஒரு தனி கொட்டகையும் ஊரில் உள்ளது)


அது சரி மற்ற பெருமாள் கோவில்களைக் காட்டிலும் இந்த கோவில் கருடனுக்கு மட்டும் ஏன் இத்தனை விசேஷம்?

விஷயத்துக்கு வருவோம்..


பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் முகமதியர்களின் படையெடுப்பின் போது திருக்குருகூர் நம்மாழ்வாரைக் காப்பாற்ற அக்கோவிலின் அர்ச்சகர்கள் ஆழ்வார் விக்ரஹத்தை எடுத்துக்கொண்டு பல்வேறு ஊர்களுக்கு பயணம் சென்றனர்


அந்த சமயத்தில் நம்மாழ்வார் விக்ரகம் இருமுறை காணாமல் போக ஒவ்வொரு முறையும் கருடன் பறவையாக வந்து ஆழ்வார் விக்ரஹத்தை காட்டிக் கொடுத்தாராம்


அதாவது அர்சகர்கள் விக்ரஹத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் போது கேரளாவில் திருக்கணாம்பி
இன்றய கோழிக்கோடு பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் நம்மாழ்வாரை வைத்துப் பூஜை செய்து வந்தனர்


அப்படியான ஒரு சமயத்தில் தான் ஶ்ரீரங்கததின் மீது ஊலுக்கான் மாலிக்காபூர் படையெடுத்து வந்ததால் ஶ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாளையும் உபய நாச்சிமார் களையும் காப்பாற்ற வேண்டி பிள்ளைலோகாசார்யர் என்னும் ஶ்ரீவைஷ்ணவர் எடுத்துக் கொண்டு தெற்கு திசை நோக்கி வந்தார்


அப்படி வந்த சில காலங்களிலேயே ஜோதிஷ்குடியில் லோகாசார்யர் பரம பதம் எய்தினார்


அதனால் அவருடைய சீடர்கள் நம்பெருமாளையும் நாச்சியார்களையும் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக செல்லும் வழியில் கேரளாவின் திருக்கணாம்பி வந்து சேர்ந்தனர்


இந்த இடத்தில் தான் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு தம் வட்ட மனையையும் முத்துச் சட்டையையும் அளித்தார்


இரண்டு கோவில் மனிதர்களும் மீண்டும் தங்களது விக்ரங்களை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில்  திருக்குருகூர அர்சகர்கள் இனி பயணம் தொடர்வது ஆபத்தானது என்று கருதி நம்மாழ்வாரை கேரளாவின்  முத்திரிப்பூ மலை அடிவாரத்தில் ஓரிடத்தில் பத்திரமாக மண்ணில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டுத் திருநகரிக்கு திரும்பி விட்டனர்


போர் மேகம் மறைந்த பின் ஆழ்வாரை மீட்டு ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டுவரச்சென்ற அந்த அர்சகர்களுக்கு ஆழ்வாரை மறைத்து வைத்திருந்த இடம் தெரியாமல் தவித்தனர்


அப்போதும் ஆழ்வார் மறைந்திருக்கும் இடத்தின் அருகிலிருந்து ஒரு கருடபட்சி கூவி அர்சகர்களுக்கு காட்டிகொடுத்தது


அர்சகர்கள் மிகுந்த சிரம ப்பட்டு மீண்டும் ஆழ்வாரை எடுத்து கொண்டு ஆழ்வாரின் திருநகரிக்கு வந்தனர் (இக்காலம் போல் அப்போது பேருந்துவசதிகள் கிடையாது)


இதனிடையே ஆழ்வார் திருநகரி, முகமதியர் படையெடுப்பில் சீரழிந்து உரு மாறி ஒரே வனமாகி விட்டது அங்கு பல விதமரங்களும் அதனுடன் பல புளிய மரங்களும் வளர்ந்து விட்டன.


ஆழ்வார் 16 ஆண்டுகள் தவம் இருந்த புளியமரம் எது என்று திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் அவர்களது சிஷ்யர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.


அந்த நேரத்திலும் ஒரு கருடபட்சி வந்துதான் உறங்காபுளியை வனத்தில் வட்டமிட்டு காட்டிக் கொடுத்தது அதன் மூலம் வனத்தில் இருந்த கோவிலையும் கண்டுபிடித்து கோவிலை புணர்நிர்மாணம் செய்து நம்மாழ்வார் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்து மறுபடியும் முறைப்படி வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad